தஞ்சையில் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் துவக்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்..

தஞ்சை மாநகராட்சி பள்ளியில் நடைபெறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை துவக்கி வைத்த பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் இன்று மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் 88 சதவிகிதத்திற்கு மேலானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி

அதிகரித்துள்ளது என்றார். தமிழகம் முழுவதும் 21, 513 பேர் கொரோனா பாதிக்கப்பட்டதில் 95 சதவிகிதம் பேர் வீடுகளிலும்5 சதவிகிதம் பேர் மட்டுமே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர் என்றவர்
தமிழகத்தில் 11 கோடியே 44 லட்சத்து 23 ஆயிரம் தடுப்பூசி போடப்பட்டது என்றார். பக்ரீத் பண்டிகை என்பதால் இன்று இஸ்லாமியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது இஸ்லாமிய பணியாளர்களுக்கு இன்று விடுப்பு வழங்கப்பட்டது காரைக்காலில் காலரா நோய் பரவியதையடுத்து, தமிழகத்தில் காலரா பரவாமல் தடுப்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது என்றார்.