மணப்பாறை அருகே உற்சாகத்துடன் துவங்கிய மீன்பிடித் திருவிழா..!!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பூசாரிபட்டியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் குயவன் குளம் உள்ளது. அப்பகுதி மக்களின் பிரதான நீராதாரமாக விளங்கும் இக்குளம் சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய நிலையில் இன்று காலை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையின் போது குளத்தில் நீர் முழுவதும் நிறைந்திருந்து.

இந்நிலையில் தற்போது நீர் மட்டம் குறைந்து விட்டதால் கிராம மக்கள் சார்பில் மீன்களைப் பிடித்துக் கொள்ளும் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. அதன்படி காலை ஊர் முக்கியஸ்தர்கள் குளத்தின் கரையில் நின்று வெள்ளைத் துண்டை தலைக்கு மேல் சுழற்றி குளத்தில் மீன்கள் பிடிக்க அனுமதி அளித்தனர். இதுவரை தண்ணீருக்கு வெளியே காத்திருந்த மக்கள் போட்டி போட்டுக் கொண்டு மீன்பிடி வலைகளுடன் தண்ணீரில் இறங்கி மீன்களை பிடிக்கத்துவங்கினர்.

Tamil Nadu: Villagers participate in fishing festival in Madurai village |  The Times of India

ஆனால் குளத்தில் மீன்கள் இல்லாததால் குளத்தில் இறங்கிய வேகத்தில் வெளியேறினர். மீன்கள் கிடைக்கும் என வெளியூரில் இருந்து வந்த ஏராளமானோர் மீன்கள் இல்லாததால் அதிருப்தி அடைந்தனர். ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் கட்லா வகை மீன்கள் மட்டும் சிக்கியது. குளத்திற்குள் அதிகளவில் முட்கள் இருந்ததால் மீன்பிடி வலைகளும் சேதநை ததுடன், மீன்பிடிக்க வந்தவர்களையும் முட்கள் குத்தியதால் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இருப்பினும் ஆங்காங்கே சிறுசிறு  பள்ளங்களில் தேங்கி இருந்த தண்ணீரில் சிறுவர்கள் உற்சாகமாக மீன் பிடித்து விளையாட்டினர்.

திண்டுக்கல் மாவட்டம், சுக்காம்பட்டி, கம்பிளியம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து வாடகைக்கு வேன் எடுத்துக்கொண்டு வந்த 30 க்கும் மேற்பட்டோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாக தெரிவித்தனர்.

Tamil Nadu: Villagers participate in fishing festival in Madurai village |  The Times of India

   திருச்சி மாவட்டம், மட்டுமல்லாது கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மீன்பிடி திருவிழாக்களில் பை நிறைய மீன்கள் அள்ளிச் சென்ற நிலையில் இன்று வெறும் பைகளை சுருட்டிக் கொண்டு சென்றது மீன்பிடி ஆர்வலர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.