ஈகை திருநாள்: தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் உற்சாகக் கொண்டாட்டம்!!

ஈகைத் திருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை தமிழநாடு முழுவதும் இன்று இஸ்லாமியர்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையில் சிறப்பு தொழுகையை இஸ்ஸாமியர்கள் நடத்தி வருகின்றனர். அப்போது ஒருவருக்கு ஒருவர் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். இந்நிலையில் தல தீபாவளியை போல் இஸ்ஸாமிய புதுமண தம்பதிகள் தல பக்ரீத் பண்டியையாக கொண்டாடுவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சென்னை உட்பட பல்வேறு இடங்களில் மசூதிகளில் தொழுகை முடித்த இஸ்ஸாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டியணைத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே போல் ராமநாதபுரம், நெல்லை மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பண்டிகை கொண்டாடி வருகின்றனர்.

மேலும், பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவிப்பது மட்டுமில்லாமல் இன்றைய தினத்தில் தமிழக அரசு பொதுவிடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

75 வது சுதந்திர தினம்: இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் – திரௌபதி முர்மு

இந்திய நாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் காக்க அனைவரும் முன்வர வேண்டும்…

தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு – 40 திருடர்களுடன் தமிழ் சினிமாவை மிரட்டிய அலிபாபா

மலைக்கள்ளன் கொடுத்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வெளியான கூண்டுக்கிளி, குலேபகாவலி இரண்டும் அதை…