செங்கல்பட்டு விபத்தில் பலி எண்ணிக்கையானது 7 ஆக உயர்வு!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது அரசு பேருந்து வேகமாக மோதி நேற்று முந்தினம் விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் சாலை விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தப்போதிலும் இன்னும் குறைந்தபாட்டில்லை. அந்த வகையில்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது அரசு பேருந்து வேகமாக மோதியது.

குறிப்பாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து ஆனது அருகில் இருந்த டிப்பர் லாரி மீது வேகமாக மோதியதால் அரசு பேருந்து அப்பளம் போல நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் 2 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 10-க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டன.

அதே போல் அரசு பஸ் டிரைவர் தலைமறைவானதாக கூறப்படுகிறது. தலைமறைவாக இருந்த அரசு பஸ் டிரைவர் முரளி இன்று காலை அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

Leave a Reply

Your email address will not be published.