பக்ரீத் பண்டிகை: விருத்தாசலத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் கூட்டுத்தொழுகை..!!

பக்ரீத் பண்டிகை உலக அளவில் இஸ்லாமியர்களின் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும் இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்படுகின்றனர் இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. 

இப்ராஹிம்  தியாகத்தை நினைவு கூறும் வகையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தப்படுவதோடு இந்த நாளில் புத்தாடை அணிவது தங்கள் வீடுகளில் ஆடு, மாடு, ஒட்டகம், போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு அவற்றை மூன்று சம பங்குகளாக பிரித்து ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கு, நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர் இதை ஈகைத் திருநாள் என்று கூறுவர்.

பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை | Islamists across the  country including in Tamil Nadu offered special prayers on the occasion of  Bakreed | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News |

அப்படிப்பட்ட பக்ரீத் பண்டிகை முன்னிட்டு விருத்தாசலம் ஆலடி ரோட்டில் உள்ள நவாப் ஜாமிஆ மஸ்ஜித் ஈதுகா மைதானத்தில் 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கூட்டுத் தொழுகை செய்தனர். பின்னர் ஒருவரை ஒருவர்  கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.