திண்டுக்கல் அருகே ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது!!

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே கலிக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கலைமகள் காலனி பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை அடுத்து கலைமகள் காலனி பகுதியில் உள்ள வீடுகளில் சின்னாளப்பட்டி போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது துரைராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டை சின்னாளபட்டியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் வாடகைக்கு எடுத்து இருப்பது தெரியவந்தது. அந்த வீட்டை சோதனை செய்தபோது தமிழக அரசு பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யும் அரிசி 13 டன் சின்ன சின்ன மூட்டைகளாக இருப்பது தெரியவந்தது.

இதனை கைப்பற்றிய போலீசார் சின்னாளபட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் 27, திண்டுக்கல் சேர்ந்த சிங்கராஜ்36, மாரிமுத்து42, ராஜா29, ஆகியோரை கைது செய்தனர் மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, ஆம்னிவேன், சரக்குவேன் என 6 கனரக வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி அதனை கேரளாவுக்கு கடத்துவதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாஸ்கர் நேரில் வந்து விசாரணை நடத்தினார் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.