12ஆம் தேதி இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை!!!

விடுமுறை

தமிழகத்தில் வைகாசி, ஆனி மாதங்கல் தொடங்கினாலே அனைத்து மாவட்டங்களிலும் திருவிழாக்கள் தொடங்கியது என்று கூறலாம். அந்தவகையில் வருகின்ற 12-ஆம் தேதி நாகை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நாகூர் நாகநாதசுவாமி கோயிலில் தேரோட்டம் நடைபெற இருப்பதால் தேரோட்டத்தை முன்னிட்டு வருகின்ற 12ஆம் தேதி அந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார்.

அதே போல் அன்றைய தினத்தில் அரசு பொதுத் தேர்வுகள் எழுதும் மாணவர்கள் மற்றும் பொதுத்தேர்வில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளார். அதோடு வங்கிகளுக்கும் இந்த விடுமுறை பொருந்தாது என கூறியுள்ளார்.

மேலும், திருவிழாவின்போது தேரோட்டம் நடைபெறுவதால் பள்ளி மாணவர்களின் வசதிக்கு ஏற்ப இந்த விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் சனிக்கிழமை அன்று பள்ளிகள் வைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.