சென்னையில் பயங்கரம்!! திருட்டு வண்டிகளை விற்று உல்லாசம்..

சென்னையில் ராயல் என்ஃபீல்ட்டு உள்ளிட்ட வாகனங்களை திருடி மிக குறைந்த விலைக்கு விற்று காதலியோடு உல்லாசமாக இருந்து வந்தார் பாய் திருடர்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் வெங்கடேஷ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது வாகனம் மாயமாகியுள்ளது. இதுதொடர்பாக ராஜிவ்காந்தி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து தனிப்படை போலீசார் ஸ்ரீதர் என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார். அதோடு விலை உயர்ந்த வாகனங்களை மிக குறைவான விலைக்கு விற்று வந்ததும் தெரியவந்தது. குறிப்பாக ஆக்டிவா பைக் ரூ.6,000-க்கும் ராயல் என்ஃபீல்ட் ரூ.22,000-க்கும் விற்பனை செய்தது தெரியவந்தது.

விற்று வந்த பணத்தை கூகுள் பே மூலம் பெற்றுக் கொண்டு தகாத உறவு மற்றும் காதலிகளுக்கு அள்ளிக் கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து ஸ்ரீதரின் நண்பர்களான 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 22 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இவர்கள் திருடிய வாகனங்களை மாத தவணை கட்டாத கடனாளிகளின் வாகனம் என கூறி அப்பாவி மக்களிடம் விற்று வந்ததாக தெரிகிறது. இந்த நூதன திருட்டு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.