லாட்டரியால் நடந்த விபரீதம்: மனைவியை கொலை செய்த கணவனுக்கு வலைவீச்சு!!

திருச்சி மாவட்டம் தாளக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சாய் நகரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வாடகை வீட்டில் குடியேறியவர் 37-வயதான நரசிம்ம ராஜ். ஆந்திராவை சேர்ந்த இவருக்கும் திருவானைக் காலனி பகுதியியை சேர்ந்த சிவரஞ்சினி என்பவருக்கும் 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றது.

இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் நரசிம்ம ராஜ் சமயபுரம் பகுதியில் இருக்கும் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்கும் முகவராக இருந்துள்ளார். அதன் மூலம் கிடைத்த பணத்தை சமயபுரம் சக்தி நகரில் புதிதாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன் அந்த வீட்டினை 28 லட்சத்திற்கு விற்பனை செய்துவிட்டு சாய் நகரில் வாடகை வீட்டில் குடியேறியுள்ளார்.

வீட்டை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த 28 லட்சம் ரூபாயை தடைசெய்யப்பட்ட லாட்டரியில் முதலீடு செய்ய முயன்றுள்ளார். இதற்கு அவருடைய மனைவி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கணவன்-மனைவி இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த நரசிம்மராஜ் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றி மறைத்து வைத்துள்ளார்.

பின்னர் அவருடைய தாயிடம் ரஞ்சினிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளதாக நாடமாடியுள்ளார். இதனிடையே ரஞ்சினியின் பெற்றோர் தனது மகளுக்கு போன் செய்தபோது சுவிச் ஆப் என வந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவருடைய வீட்டிற்கு வந்து பார்த்த போது வீடு பூட்டி கிடந்தது.

இதனிடையே காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தபோது ரஞ்ஜினியின் உடல் பிளாஸ்டிக் கவரால் சுற்றி அழகிய நிலையில் இருந்துள்ளது. பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள நரசிம்மரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.