பிரேத பரிசோதனை நிலையத்தில் முறைகேடு… நீதிபதி அதிரடி உத்தரவு!!

chennai high court

அரசு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனைகள் நடக்கின்றன. தடயவியல் நிபுணர்கள் முன்னிலையில் தான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால் மதுரை, செங்கல்பட்டு, சென்னை ஆகிய 3 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே தடயவியல் நிபுணர்கள் பணியாற்றுகின்றனர். பெரும்பாலான மருத்துவமனைகளில் டாக்டர்கள் இல்லாமல் துப்புரவு பணியாளர்கள், அலுவலக உதவியாளர்களே பிரேத பரிசோதனை செய்கின்றனர். ஆனால், டாக்டர் முன்னிலையில் நடந்ததாக அறிக்கையளிக்கின்றனர். பிரேத பரிசோதனை அறைகளில் வீடியோ பதிவு செய்ய வேண்டுமென கடந்த 2008ல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம் மருத்துவ விதிப்படி பிரேத பரிசோதனை முடித்து 24 மணி நேரத்திற்குள் மாஜிஸ்திரேட் மற்றும் துறைத் தலைவருக்கு அறிக்கையளிக்க வேண்டும். பிரேத பரிசோதனைகள் வீடியோ பதிவு செய்ய வேண்டும். பிணவறை மற்றும் பிரேத பரிசோதனை கூடம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சிசிடிவி காமிரா பொருத்தி எல்லா நேரமும் இயங்க வேண்டும். பிரேத பரிசோதனை செய்வதற்கான கருவிகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் கொள்முதல்செய்ய வேண்டும். அனைத்து மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் அறிவியல் அலுவலரை தடயவியல் நிபுணர்குழு மூலமாக நியமனம் செய்ய வேண்டும்.

இந்த உத்தரவுகள் இதுவரை நடைமுறைப்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ் எஸ் சுந்தர் ,ஸ்ரீமதி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது அரசு தரப்பில் நீதிமன்றம் உத்தரவிட்ட அனைத்து உத்தரவுகளையும் நிறைவேற்றிவிட்டதாக கூறபட்டது.

வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் தரப்பில் நீதிமன்ற உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை பழைய நிலையே தொடர்ந்து நீடிக்கிறது என்றார். இதனை தொடர்ந்து நீதிபதிகள் கடந்த 3 நாட்கள் நடைபெற்ற சிவகங்கை, விருதுநகர், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூடத்தில் பதிவு செய்யப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *