மீனவர்களே உஷார்!! இந்த நாட்களில் கடலுக்கு செல்லவேண்டாம்..

கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இதனிடையே இன்று முதல் 10-ம் தேதி வரையில் குமரிக்கடல்‌ பகுதி, மன்னார்‌ வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌ என கூறியுள்ளது.

அதே போல் 8-ம் தேதி முதல் 11 தேதி வரையில் ஆந்திர கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்துல்‌ வீசக்கூடும்‌ என கூறியுள்ளது.

வருகின்ற 8-ம் தேதி முதல் 12 தேதி வரையில் கர்நாடகா கடலோரப்பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌ என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும், சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌ என கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.