மதுரையில் பழங்கால பொருட்கள் விற்பனைக்கு மட்டும் அனுமதி கோரிய வழக்கு: கோர்ட் அதிரடி!!

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பஸ்நிலையம், வாகன காப்பகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பல கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகின்றன. இந்தநிலையில் மீனாட்சி அம்மன் கோவில் ஜான்சிராணி பூங்கா வளாகத்தில் ரூ.2 கோடியே 45 லட்சம் செலவில் புராதன பஜார் கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.

இந்த கடைகளில் வெளிநாடு-உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பழங்கால மற்றும் புராதன பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 12 கடைகள் கட்டப்பட்டு உள்ளன. வெறும் 2 கடைகளை மட்டும் புராதன பொருட்கள் விற்பனைக்காக விட்டுவிட்டு மற்ற கடைகளை வணிக நோக்கத்தில் ஏலம் விடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதனால் அந்த கடைகள் கட்டப்பட்டதன் நோக்கம் நிறைவேறாமல் போய்விடும்.
எனவே இந்த கடைகளை ஏலம் விடுவதற்கு தடை விதிக்க வேண்டும். உரிய நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் ஏலம் நடத்த உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், வெளி மாநிலங்கள் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு ஏதுவாக சிற்றுண்டி கடைகள், அழகு சாதன பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி நிர்வாக ரீதியான முடிவுகளில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *