குடும்ப பிரச்சனையால் மனைவியை எரித்து கொலை செய்த கணவர்: கோர்ட் அதிரடி உத்தரவு!!

மதுரை அருகே குடும்ப தகராறில் மனைவியை மண்ணெணெய் ஊற்றி எரித்து கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மதுரை ஊமச்சிகுளம் பகுதியில் சேர்ந்த காளீஸ்வரன் அவருடைய மனைவி மீனா பொண்ணு. இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு குடும்ப தகராறு போது மனைவியின் மீது மண்ணெணெய் ஊற்றி எரிக்க. முயன்றுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மீனா பொண்ணு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்த வழக்கு மதுரை மாவட்டம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட காளீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனையும் 5000 ருபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.