குறைந்த விலையில் நகைகள் வாங்கி தருவதாக மோசடி: 2 பேர் கைது!!

ராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் 30 வயதான வளர்மதி. இவரது சகோதரி 25 வயதான காயத்திரி. காயத்ரி உச்சிபுலியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் காயத்திரி வேலை செய்யும் நிறுவனத்தில் ஏலம் விடப்படும் நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறி அப்பகுதியில் இருக்கும் பொதுமக்களிடம் பணம் பெற்று நகைகளை கொடுக்காமல் மோசடி செய்துள்ளனர். குறிப்பாக நெருங்கிய உறவினர்களிடம் சகோதரிகளிடம் கைவரிசை காட்டியதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடந்த மாதம் 2 முறை ராமநாதபுரம் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். எஸ்பி தங்கதுரை உத்தரவின் பெயரில் மாவட்ட மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சகோதரிகள் மற்றும் நகைக்கடை உரிமையாளர் மீது ஜூன் 30-ஆம் தேதி வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் சகோதரிகள் இருவரையும் கைது செய்த போலீசார் பரமகுடி கிளைச்சிறையில் அடைத்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். இதுவரையில் 2.5 கோடி மோசடியில் ஈடுப்பட்டதாக சகோதரிகள் மீது புகார் அளித்திருக்கும் நிலையில் மேலும் பலரை ஏமாற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அவர்களும் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர். ஏலத்தில் விடப்படும் நகைகளை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாக சகோதரிகள் இரண்டு பேர் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.