திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது!!

கன்னியாகுமரி மாவட்டம் திருவெட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற திருவெட்டாறு ஆதித்திர பெருமாள் கோயிலில் 108 வைணவ திருத்தளங்களில் 76 ஆவதாக வைத்து எண்ணப்படிகிறது. வெளிநாட்டு அரசர்களும், திருவேலாங்கனூர் அரசர்களும் இக்கோயிலில் கட்டுமானப்பணிகளை செய்துள்ளனர்.
இந்த கோயிலின் தூண்களில் ராமாயணம், மகாபாரதம் மற்றும் பிற புராணங்களை தொடர்பான 2300-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாதன் சுவாமி கோயில் போன்று திருவெட்டாறு ஆதிகேசவன் பெருமாள் கோயிலின் வடிவமைப்பும் அமைந்துள்ளது.
இந்த கோயில் 418 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்று வருகிறது. கோயிலில் நவகிரக கவசமானது சுமார் 7 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு தற்போது இதற்கு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 2011-ஆம் ஆண்டு கும்பாபிஷே பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் இதற்கு போதுமான நிதி கடந்த ஆட்சியில் ஒதுக்கப்படாததால் திருப்பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் தற்போதைய அரசு தேவையான நிதியை ஒதுக்கி குடமுழுக்கு விழா இன்று சிறப்பாக நடத்தியுள்ளது.
மேலும், தற்போது நடைப்பெற்று வரும் குடமுழுக்கு விழாவில் அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதற்காக 500 போலீசார் அடங்கிய பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.