உஷார்!! தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்..

தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு சிறிது நேரம் மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டன் பொன்னேறியில் பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் கனமழை பெய்துள்ளது.

அதே போல் திருத்தணி, திருவேலங்காடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் வெயில் வாட்டிய நிலையில் கனமழை கொட்டிதீர்த்தது. அரக்கோணம் திருத்தனி சாலையில் கழிவு நீருடன் மழைநீரும் கலந்து ஓடியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் அரியம் ரிஷிவந்தியம் மற்றும் மணலூர் பேட்டை உள்ளிட்ட பலத்த காற்றுடன் இடிமழை 1 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. விழுப்புரம் மாவட்டம் அரகண்ட நல்லூர் பகுதிகளில் கனமழை பெய்ததால் மானாவரி பயிர் செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும், மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

அதே போல் இன்றும், நாளையும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.