ஷாக் நியூஸ்!! பொறியியல் படிப்பி 38% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி..

கடந்த 2021-2022 கல்வியாண்டில் பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் என்பது கொரோனா காரணமாக தாமதமாக திறக்கப்பட்டது. முதலில் ஆன்லைன் வகுப்பிலும் அதன் பிறகு நேரடி வகுப்புகள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் மாணவர்களுக்கான வகுப்புகள் என்பது தாமதமாக தொடங்கப்பட்டதால் கடந்த மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைப்பெற்ற தேர்வு முடிகள் சில நாட்களுக்கு முன் வெளியாகியது. அதன் படி 38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி அடைந்து இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அதே போல் 68% மாணவர்கள் ஒரு பாடம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்து இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மாணவர்களின் வசதிக்கு ஏற்ப வினாத்தாள் எளிதாக இருக்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

தற்போது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 38 சதவீதம் மாணவர்கள் மட்டும் தேர்ச்சி அடைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைகழக தேர்வு அதிகாரிகள் கொடுத்த தகவலின் படி, ஓரிரு நாட்களில் அதிகாரபூர்வமான தகவல் வெளியிடப்படும் என கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.