வீட்டு உபயோக சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: எவ்வளவு தெரியுமா?

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளதால் இல்லத்தரசிகள் உட்பட அனைத்து தரப்பினரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற இறக்க அடிப்படையில் இந்தியாவின் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றும் நிலையில் கேஸ் சிலிண்டர் விலையும் மாதத்திற்கு இரண்டு முறை மாற்றி அமைக்கப்படுகிறது.

கடந்த மே மாதம் 7-ஆம் தேதி 14.2 கிலோ கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.1015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மீண்டும் மே 19-ம் தேதி 3 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.1018 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் சென்னையில் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.1068.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்து வரும் நேரத்தில் ஒன்றிய அரசு மீண்டும் சிலிண்டர் விலையை உயர்த்தி உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…