வால்பாறையில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 2 நாட்கள் விடுமுறை!!

கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பல்வேறு இடங்களில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக சாலையோரங்களில் மழை நீருடன், சாக்கடை நீர் கலந்து வெள்ளக்காடாக காட்சி அளிப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு கோவை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதன் படி, வால்பாறையில் இருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனிடையே வால்பாறை தாலுக்காவில் நாளை மற்றும் நாளை மறுநாள் கல்வி நிறுவனங்களுக்கு கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
மேலும், அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.