மக்களே உஷார்!! அடுத்த 2 மணி நேரத்தில் மூன்று மாவட்டங்களுக்கு மழை பெய்யும்..

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இரண்டு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

இதனிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நாளை முதல் வருகின்ற 7-ஆம் தேதி வரையில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதே போல் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளதாக கூறியுள்ளது.

மேலும், சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.