2500 பள்ளிக்கூடங்களுக்கு விடிவு காலம்; அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன ஹேப்பி நியூஸ்!

கும்பகோணம் அருகே நீலத்த நல்லூரில் அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி: தமிழகத்தில் 2500 பள்ளிக்கூடங்கள் மரத்தடியில் இயங்குவதாகவும் இதற்கு நிரந்தர கட்டிடங்கள் கட்ட நபார்ட் வங்கி மூலம் 1300 கோடி ரூபாய் நிதி உதவியுடன் மரத்தடி பள்ளிகளுக்கு கட்டடங்கள் கட்டப்படும் எனத் தெரிவித்தார்.

மேல்நிலை கல்வி முடித்து கல்லூரியில் சேரும் மாணவ மாணவியர்களுக்கு வசதியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுவதாகவும், அரசு பள்ளிகளில் கல்வி கற்று கல்லூரிகளில் சேர 7.5 சதவீத இட ஒதுக்கீடுக்கும் கிடைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

13000 ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் வரும் 7 ,8 தேதிகளில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நீதிமன்றத்திடம் அளிக்கப்படும் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.