ஆயிரம் குடும்பங்களுக்கு ஆபத்து; கரூரில் போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்!

Sugar factory

கரூர் அருகே புகலூர் ஈஐடி பாரி சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆலை முன்பு கரித்தூளை கொட்டி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம் புகழூரில் EID parry சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது.
60 வருடங்களுக்கு மேலாக ஆலை செயல்பட்டு வருகிறது. ஆலையை சுற்றி தளவாபாளையம், புகலூர் நால்ரோடு, தோட்டக்குறிச்சி, செம்படாபாளையம் பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்நிலையில் சர்க்கரை தயாரிக்கும் இயந்திரத்தில் இருந்து வெளிவரும் புகையின் ஃபில்டர் பகுதி பழுது அடைந்து உள்ளதால், அதிலிருந்து வரும் கரி துகள்கள் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியில் விழுவதால் பாதிப்பு ஏற்படுகிறது.

ஆலையிலிருந்து வெளிவரும் கரி தூள்கள் வீடுகளில் படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆஸ்துமா, சளி, காய்ச்சல் உள்ளிட்ட வியாதிகள் ஏற்படுகிறது. அதேபோல் ஆலையிலிருந்து வெளிவரும் கழிவுநீர் இரவு நேரங்களில் வாய்க்கால்களில் கலப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

பல முறை ஆலை நிர்வாகத்திடமும், மாசு கட்டுப்பாட்டு வாரித்திடமும் முறையிட்டு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இன்று புகழூர் சர்க்கரை ஆலை வாயில் முன்பு 300 க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆலையின் முன்புறம் கறி துகள்களை கொட்டி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரவக்குறிச்சி டிஎஸ்பி முத்தமிழ்செல்வன், வேலாயுதம்பாளையம் போலீசார், வட்டாட்சியர் மோகன்ராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், காற்று காலம் என்பதால் அதிக அளவில் கரி துகள்கள் வீடுகளில் வீசப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published.