குடிகார கணவனால் பெண் எடுத்த விபரீத முடிவு; 3 வயது குழந்தை உட்பட 4 பேர் உயிருக்கு ஆபத்து!

கண்டமங்கலம் அருகே கணவர் குடித்து வந்ததால் மனைவி, 3 குழந்தைகள் என 4 பேர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உள்ள கல்த்திராம்ப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் இவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். பலமுறை தட்டி கேட்டு குடும்ப சண்டை வந்துள்ளது.

இதனால் மணமுடைந்த அவருடைய மனைவி சாந்தி(32) மூன்று குழந்தைகள் ஹரிணி (13), குணஸ்ரீ(8), தேஜாஸ்ரீ(3) எலி மருந்து கொடுத்துவிட்டு தானும் சேர்ந்து நான்கு பேரும் விஷம் அதிகமுள்ள எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட நால்வரும் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கண்டமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.