சற்று குறைந்த தங்கம் விலை: நிம்மதியில் இல்லதரசிகள்!!

கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலையினை தொடர்ந்து தங்கத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் வாரத்தின் முதல் நாளான இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது.

இதனிடையே இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4, 805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4,810 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து சவரனுக்கு ரூ. 38,440-க்கு விற்பனையாகிறது.

அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. நேற்று மாலை இதன் விலை ரூ. 5,248- ஆக இருந்தது. தற்போது கிராமுக்கு 6 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5,242-ஆகவும் பவுனுக்கு ரூ. 41,936 ஆக விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளியின் விலை சற்று அதிகரித்துள்ளது.

அந்த வகையில் இன்று ஒரு கிராம் 64.70 காசுகளாகவும் ஒரு கிலோ 64.700 ஆயிரமாக விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 2 நாட்களாக தங்கம் விலை அதிகரித்த நிலையில் தற்போது சற்று குறைய தொடங்கியுள்ளதால் நகை பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.