சென்னைவாசிகளே உஷார்!! – மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்..

உருமாறிய ஒமைக்ரான் பாதிப்பு திரிபு ஆனது 8 பிரிவுகளாக உருமாற்றம் அடைந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே கொரோனாவின் பாதிப்பானது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் கொரோனாவின் தொற்று அதிகரித்து காணப்பட்டது. இதனால் அண்மையில் சுகாதாரத் துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த சூழலில் நேற்றைய தினத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் அதேபோல் அரசின் வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி வணிக நிறுவனங்கள், மால்கள், திரையரங்குகளில் வரக்கூடிய வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கட்டாயம் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

மேலும், இன்றைய தினத்தில் முக கவசம் அணியாத பொதுமக்களுக்கு அபராதம் விதித்து வசூலிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சி இருக்கக்கூடிய 15 மண்டலங்களில் மற்றும் 200 வார்டுகளிலும் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 வசூலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.