திமுக கவுன்சிலர் மீது தாக்குதல் அதிமுக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு; சிறப்பு காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!

கோவை மாநகராட்சி 90 வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரமேஷ் உட்பட 4 பேர் மீது குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மாநகராட்சி பேட்மிட்டன் கிளப்பில் விளையாட சந்தா தொகை செலுத்தாதது குறித்து கடந்த 3 ம் தேதி திமுகவை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கேள்வி எழுப்பினார். கார்த்திகேயனை 90வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் அபுதாகீர், ஜான்சன், சத்ரக் ஆகியோர் சேர்ந்து தாக்கினர்.

காயமடைந்த கார்த்திகேயன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் அதிமுக கவுன்சிலர் ரமேஷ் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆபாசமாக பேசுதல் காயம் ஏற்படுத்துதல் சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் குனியமுத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தாக்குதல் சம்பவம் குறித்து தகவல் தெரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலதாமதமாக செயல்பட்ட குனியமுத்தூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.