என்ன சொல்றீங்க! காரைக்காலில் காலரா பரவியதற்கு இதுதான் காரணமா?

காரைக்காலில் காலரா பரவியதற்கு சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் மாம்பழங்கள் மூலம் நோய்த்தொற்று பரவி இருக்கலாம் என்று புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் நோய்த் தொற்று ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் காரைக்காலில் காலரா நோய் பரவி அங்கு 2 பேர் உயிரிழந்தால் அவசரமாக நேற்று மாலை காதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை இயக்குனர் 144 தடை அமலுக்கு கொண்டுவந்தார்.
அதோடு 3 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் காரைக்காலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் லட்சுமி நாராயணன் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
மேலும் இதுவரையில் 700 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளதாகவும், அரசின் அனைத்து துறைகளும் காரைக்காலின் முகாமிட்டு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியதாக கூறினார். கழிவுநீர் வாய்க்கால் குடிநீர் தொட்டிகளில் குளோரின் தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், காலரா அறிகுறி தென்பட்டால் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் உடனடியாக அப்பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.