அண்ணன் பெற்ற கடனை வசூலிக்க தம்பியை தூக்கிய கும்பல்: சென்னையில் பரபரப்பு!!

சென்னையில் அண்ணன் வாங்கிய 40 லட்சம் கடனை வசூலிக்க தம்பியை கடத்தி சென்று சித்திரவதை செய்த கும்பலில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சினிமா பாணியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அதோடு கடத்தப்படு மீட்கப்பட்டவர் ராமநாதபுரம் பட்டினத்தை சேர்ந்த எஸ்.பி பட்டினத்தை சேர்ந்த 22 வயதான ஜெயின் மீரான். இவர் சென்னை சைதாப்பேட்டையில் தங்கி ஒரு கடையில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

நேற்று மண்ணடியில் உள்ள உணவகத்திற்கு சென்ற இவரை கடத்தி சென்று அப்பகுதியில் இருக்கும் குடோனில் கடத்தி சென்றனர். இந்நிலையில் தன்னுடைய அண்ணன் 40 லட்சம் கடன் வாங்கியதால் தான் கடத்தப்பட்டதை அறிந்த ஷேக் மீரான் பணத்தை கொடுத்துவிட்டு தன்னை மீட்கும் மாறு தந்தையிடம் செல்போனில் புகார் அளித்தார்.

இதனால் அவருடைய தந்தை அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு புகார் அளித்தார். அப்பகுதிக்கு சென்ற போலீசார் அவரை மீட்டனர். அவர்களிடம் புதுக்கோட்டை மாவட்ட ஆவுடையாரை சேர்ந்த லட்சுமணம், விஜயன் ஆகியவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், தப்பியோடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.