அரசு மருத்துவமனையில் காணாமல் போன குழந்தை அடுத்த 24 மணி நேரத்தில் மீட்பு !!

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நேற்று காலை கடத்தப்பட்ட பச்சிளங்குழந்தை அடுத்த 24 மணி நேரத்தில் கேரள மாநிலம் கொடுவாயூரில் மீட்கப்பட்டுள்ளது.

பொள்ளாட்சியை சேர்ந்த யூனஸ் மற்றும் திவ்யபாரதி தம்பதியினருக்கு கடந்த புதன்கிழமை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் பிறந்த 4 நாட்களாக பெண் குழந்தையை மர்ம நபர்கள் கடத்தி இருந்தனர். இதனிடையே 6 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு கடத்தப்பட்ட குழந்தை தேடப்பட்டு வந்தது.

இந்த சூழலில் கேரளாவில் பாலக்காடு பகுதியில் கொடுவாயூரில் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. பிறகு அரசு மருத்துவமனைக்கு வந்த காவல்துறை கண்காணிப்பாளர் குழந்தைகள் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இதனிடையே கண்ணீர்மல்க குழந்தையை வாங்கிய பெற்றோர்கள் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்ட போது பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாத நிலையில் அருகில் இருக்கும் வணிக வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் குழந்தையை கடத்தி சென்ற சம்பவத்தை ஆய்வு செய்ததாக கூறினர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 2 பெண்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பச்சிளம் குழந்தையை அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.