ஷாக் நியூஸ்!! குற்றாலம் ஐந்தருவியில் குப்பைகளை கொட்டிய அவலம்..

தமிழகத்தில் சென்னை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. தேனாம்பேட்டை, அடையாறு, வேளச்சேரி, கிண்டி மற்றும் கோடம்பாக்கம் போன்ற பகுதிகளில் இடி மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் குற்றாலம் மற்றும் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சிறிய கற்கள் மரக்கட்டைகள் நீரில் அடித்து வர படலாம் என்பதால் குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் விடுமுறை நாட்களில் அங்கு சென்றுள்ள சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் தூய்மைப் பணியாளர் ஒருவர் குப்பைகளை அருவி நீரில் கொட்டி அப்புறப்படுத்திய காட்சியானது அங்கு இருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கொரோனா, காலரா போன்ற நோய்கள் அச்சுறுத்தி வரக்கூடிய நிலையில் இவ்வாறான பொறுப்பற்ற செயல்களை அனுமதிக்க கூடாது என பொதுமக்கள் கூறுகின்றனர். அதே போல் தூய்மை பணிகளை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.