கடலை எண்ணெய் லிட்டருக்கு ரூ.20 உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

கடந்த சில நாட்களாவே தமிழகத்தில் கச்சா எண்ணெய் விலையினை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக மிளகாய், தனியா,உப்பு என துவங்கி சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்களின் விலையும் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தற்போது கடலை எண்ணெய் விலை லிட்டருக்கும் ரூ.20 அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே 15 லிட்டர் கடலை எண்ணெய் ரூ.2,900-க்கும், நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7,000 ஆக சந்தைகளில் விற்பனையாகிறது.

தமிழகத்தில் மட்டும் கடலை எண்ணெய் விலை தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தேனி, சேலம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை மாவட்டங்கள் 60 சதவீதம் என்றும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கலில் 40 சதவீதம் என்ற அளவில் இருந்து வருகிறது. ஆனால் தற்போது பருவமழை உள்ளிட்ட காரணங்களினால் வரத்தானது குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

இதனிடையே பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.20 குறைந்து, ஒரு லிட்டர் பாமாயில் ரூ.130-க்கும் சூரியகாந்தி எண்ணெய் ரூ.175-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் ரூ.280-க்கும் விற்பனையாகிறது. மேலும், நிலக் கடலை விளைச்சல் அதிகரித்தால் மட்டுமே எண்ணெய் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

75 வது சுதந்திர தினம்: இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் – திரௌபதி முர்மு

இந்திய நாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் காக்க அனைவரும் முன்வர வேண்டும்…