பக்ரீத்தின் எதிரொலி: விராலிமலையில் ரூ. 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை!!

ஆடுகள்

பக்ரீத் பண்டிகை நெருங்குவதை ஒட்டி விராலிமலை ஆட்டுச்சந்தையில் விற்பனைகளைகட்டியுள்ளது.

பக்ரீத் பண்டிகை நெருங்கி வருவதால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விராலிமலை ஆடுகள் சந்தையில் ஆடுகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய விராலிமலை ஆட்டு சந்தையில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கி சென்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பல்வேறு ஊர்களில் திருவிழாக்கள் நடைபெறுவதால் ஆடுகளை பலியிட்டதால் பக்ரீத் பண்டிகையில் ஆடுகளின் வரத்து என்பது குறைவாக இருக்கும் என்று வியாரிகள் நினைத்தனர். ஆனால் தற்போது விராலிமலை ஆட்டுச் சந்தையில் காலை முதலில் 1000-க்கும் மேற்பட்ட ஆடுகள் ஆட்டோ போன்ற வாகனங்களில் விற்பனைக்கு வந்தன.

எனவே ஆடுகளை வாங்குவதற்காக இஸ்லாமியர்கள் மற்றும் இறைச்சி கடைக்காரர்கள் காலைமுதலில் இருந்தே வாரத்தந்தையில் திரண்டனர். அனைத்து ஆடுகள் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையில் விற்பனையாகுவது வழக்கம். ஆனால் பக்ரீத் பண்டிகையையொட்டி 14 முதல் 16 ஆயிரம் வரையில் ஆடுகள் விற்பனையானதாக கூறப்படுகிறது.

தற்போது ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக கூறப்படுகிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.