காலரா முன்னெச்சரிக்கையாக 3 நாட்களுக்கு காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

கடந்த சில நாட்களாகவே புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் நோய்த் தொற்று ஏற்படுவதால் மக்கள் அங்கு இருக்கும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அப்பகுதியில் இருக்கும் தண்ணீர் தூய்மையற்ற முறையில் இருப்பதால் காலராவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் அப்பகுதிகளுக்கு சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை இயக்குனர் 144 தடை உத்தரவை அமலுக்கு கொண்டுவந்துள்ளார்.
அதோடு காலரா அறிகுறி தென்பட்டால் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் உடனடியாக அப்பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது காரைக்கால் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே பள்ளிகள் திறக்கும் போது மீண்டும் நோய்த்தொற்றும் அபாயம் அதிகமாக இருந்தால் மீண்டும் அவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அம்மாநிலத்தில் 2 பேர் காலராவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.