வேலை இல்லை..திருமணமாகாத கவலை… இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனாவின் தாக்கமானது இன்னும் குறையாமல் இருக்கும் சூழலில் பல்வேறு பொதுமக்கள் இதனால் பாதிப்பு அடைந்துள்ளனர். அந்த வாகையில் கொரோனாவால் பறிபோன வேலை மற்றும் திருமணமாகாத விரக்தியில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே இருக்கும் ஏகாட்டூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வில்லியம் ஜேம்ஸ். இவரது மகள் ஜெனிபர். 35 வயதான இவர் மென்பொருள் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். பல முன்னணி நிறுவனங்களில் வேலை செய்து வந்த ஜெனிபர் கொரோனாவின் காரணமாக வேலை இழந்துள்ளார்.

இதனால் வீட்டில் முடங்கிக் கிடந்த ஜெனிபர் மீண்டும் வேலைக்காக பல நிறுவனங்களில் வேலை கேட்டுள்ளார். ஆனாலும் அவருக்கு வேலை கிடைக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. பல வருடங்களாக வேலை செய்து வந்த ஜெனிபருக்கு தற்போது வேலை இல்லாமல் இருந்துள்ளது மன உளைச்சலை கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதே சமயத்தில் 35 வயது ஆகியும் திருமணம் நடைபெறாமல் இருந்தால் ஜெனிபர் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இதனால் வீட்டில் இருப்பவர்களிடம் கூட முகம் கொடுத்து பேசாமல் இருந்த ஜெனிபர் தன்னுடைய அறையை விட்டு வெளியே வராமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மகள் உறங்கி இருப்பாள் என நினைத்து வீட்டில் இருந்தவர்கள் தூங்கியபோது அதிகாலையில் ஜெனிபர் 24 மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனிடையே ரத்தவெள்ளத்தில் கிடந்த அவரது சடலம் காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Leave a Reply

Your email address will not be published.