இதென்னடா நூதன திருட்டா இருக்கு… தூங்கிக்கொண்டிருந்தவர் கழுத்தையும் விட்டு வைக்காத திருடன்!

விருத்தாசலம் அருகே காரையூரில் வீட்டின் பீரோவை திறந்து அதிலிருந்து 13 பவுன் நகை மற்றும் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க செயின் மர்ம நபர்கள் திருடி சென்றதால் பரபரப்பு

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே காரையூர் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் விவசாயி இவரது மனைவி வளர்மதி மற்றும் அண்ணன் மகள் கலையரசி இவர்கள் மூன்று பேரும் நேற்று இரவு வீட்டின் வரண்டாவில் தூங்கியுள்ளனர் அப்போது மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே நுழைந்து பீரோவை திறந்து அதிலிருந்து 13 பவுன் நகையை திருடியுள்ளனர்.

மீண்டும் வராண்டாவில் படுத்திருந்த கலையரசி கழுத்தில் இருந்த தாலி சரடு ஐந்து சவரன் பறிக்கும்போது அப்போது கலையரசி திருடன் திருடன் என்று கூச்சலிட பின்னர் அன்பழகன் மர்ம நபரை பிடிக்க முயற்சித்த போது வீட்டின் பின்புறமாக தப்பி ஓட்டினர் இதுகுறித்து அன்பழகன் பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார் அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்து வருகின்றனர் கிராம பகுதியில் வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே நுழைந்து 18 பவுன் நகை திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.