அடக்கொடுமையே!!… மனைவி தங்கை மீது காதல் கொண்ட நபரால் அக்காவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

Kidnap

விழுப்புரத்தில் மனைவியின் தங்கை மீது காதல் கொண்டு கடத்திய மாமா எதிர்ப்பு தெரிவித்து காரில் தொங்கியபடியே சென்ற அக்காவால் பரபரப்பு ஏற்பட்டது.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சார்ந்தவர் வெங்கடேசன் இவர் சென்னை தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார் இவர் தியாகதுருகத்தைச் சேர்ந்த விஜயா பானு என்பவரை திருமணம் செய்து இரண்டு குழந்தை உள்ளது. இவர்கள் சென்னையில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் மனைவியின் தங்கை மருத்துவரான விஜய மஞ்சுவை காதலித்து உள்ளனர். இதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். விஜயமமஞ்சு தனது மற்றொரு அக்கா கனிஷ்காவுடன் விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் எதிரில் உள்ள ஜி ஆர் டி நகை கடைக்கு வந்து வந்துள்ளார். அப்பொழுது சென்னையில் இருந்து வந்திருந்த வெங்கடேஷ் தனது காதலியும் மனைவியின் தங்கையுமான விஜயமஞ்சுவை காரில் ஏற்றிக்கொண்டு கடத்தியுள்ளார்.

உடனடியாக இதனை கண்ட மற்றொரு அக்கா கனிஷ்கா காரில் தொங்கியபடியே சென்றுள்ளார் காரை நிறுத்தாமல் அரை அரை கிலோமீட்டர் தூரம் அதாவது விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் இருந்து சென்னை மார்க்கமாக சென்றுள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் காரை விரட்டி சென்று பிடித்து காரை தாக்கி அந்த பெண்ணை மீட்டு உள்ளனர். பின்னர் போலீஸிற்கு தகவல் கொடுத்து போலீசார் காவல் நிலையத்திற்கு சென்று விசாரணை செய்து வருகின்றனர் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நடந்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

Your email address will not be published.