கனமழை எதிரோலி: குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!!

காரணமாக குற்றாலம் ஐந்தருவி போன்ற அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வழக்கமாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் இருக்கும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக குற்றாலத்தில் மழை இல்லாததால் அருவிகளில் நீர்வரத்து என்பது குறைவாகவே இருந்து வந்தது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனிடையே குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக அருவிகளில் நீர்வரத்து என்பது அதிகரித்தது.

குறிப்பாக மாலையில் ஐந்து அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே போல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழைபெய்ததால் பொள்ளாச்சி அருகே ஆழியார் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தென்மேற்கு பருவமழை தொடங்கி இருப்பதால் கவி அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் கவி அருவியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மேலும், வெள்ளம் குறைந்தவுடன் ஆழியார் அருவி திறக்கப்பட வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *