குட் நியூஸ்!! சிலிண்டர் விலை அதிரடி குறைவு..எவ்வளவு தெரியுமா?
கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் மாதம் ஒரு முறை சிலிண்டர் விலை நிர்ணயம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் இன்றைய தினத்தில் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை தாறுமாறாக குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 187 குறைந்துள்ளது.
இதனிடையே கடந்த மாதம் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலையானது ரூபாய் 2373 க்கு விற்பனை செய்யப்பட்டு இருந்தது. தற்போது இதன் விலையானது ரூபாய் 2186 ஆக விற்பனை செய்யப்படுவதால் ஹோட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இன்றி காணப்படுவதால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.