ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?

கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலையினை தொடர்ந்து தங்கத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது.

இதனிடையே இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4, 785 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4,678 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 107 அதிகரித்து சவரனுக்கு ரூ. 38,280-க்கு விற்பனையாகிறது.

அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. நேற்று மாலை இதன் விலை ரூ. 5,103- ஆக இருந்தது. தற்போது கிராமுக்கு 18 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 5,220-ஆகவும் பவுனுக்கு ரூ. 41,760 ஆக விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் சற்று குறைவு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று ஒரு கிராம் 65 காசுகளாகவும் ஒரு கிலோ 65.000 ஆயிரமாக விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் தற்போது தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *