தமிழகத்தில் 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

இதனிடையே இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, விழுப்புரம்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது.

வருகின்ற 3,4 தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என கூறியுள்ளது.

அதோடு 5-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும், சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஒரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான முதல் மிதமான மழை
பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌ என கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *