350 தட்டுகளில் சீர்வரிசை…மஞ்சள் நீராட்டு விழாவில் அசத்திய தாய்மாமன்கள்!!

புதுக்கோட்டையில் மஞ்சள் நீராட்டு விழாவையொட்டி கெத்து காட்டிய தாய்மாமன்கள் டாரஸ் லாரியில் 350 சீர்வரிசை தட்டுகளை மேளதாளம் முழங்க கொண்டு சென்றதை பொதுமக்கள் வியப்பில் கண்டுரசித்தனர்.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் காது குத்து, மஞ்சள் நீராட்டு விழாவிற்கு தாய்மாமன்கள் போட்டிப்போடுகொண்டு சீர்வரிசை கொண்டு வருவது பாரம்பரியமாக இருந்து வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை நகர் பகுதியை உட்பட்ட காமராஜப்புரத்தை சேர்ந்த சுப சரவணின் மகள் தமிழினிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைப்பெற்றது.

இந்நிலையில் தாய்மாமன்கள் சாரஸ்லாரியில் 350 சீர்வரிசை தட்டுகளை கொண்டுசென்று அசத்தியுள்ளனர். வானவேடிக்கை மற்றும் மேளதாளங்கள் முழங்க 350 சீர்வரிசைகளை தாய் மாமன்கள் கொண்டு சென்றதை வியப்புடன் கண்டுரசித்தனர்.

இதனிடையே சீர்வரிசை தட்டுகளில் தாய்மாமன்களின் ஆடைகள், அலங்கார உடைகள், பழங்கள் மற்றும் புத்தகங்கள் என கொண்டுவந்து அசத்தியுள்ளனர். புதுக்கோட்டை காமராஜ புரத்தில் இருந்து மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும் நிஜாம் காலணி தனியார் திருமண மண்டபம் வரையில் தாய்மாமன்கள் சீர்வரிசை கொண்டு சென்றதை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *