டாஸ்மாக்கடையில் கிடைக்கும் வருமானம் போல் இதில் கிடைத்தால்தான் அக்கறை காட்டுவீர்களா? – உச்சநீதிமன்றம் கேள்வி!!

டாஸ்மாக் நிறுவனம் போல் வருமானம் கிடைத்தால் தான் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

தமிழகத்தின் வனப்பகுதியில் இருக்கக்கூடிய அந்நிய மரங்களை அகற்ற தொடரப்பட்ட வழக்கானது இன்று அமர்வுக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் சத்தியமங்கலம் பரப்பில் இருக்ககூடிய 1500 ஏக்கர் அளவில் அந்நிய மரங்கள் பரவியுள்ளதாகவும், போர்க்கால அடிப்படையில் இவற்றை அகற்றாவிட்டால் நாட்டு மரங்கள் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அன்னிய மரங்களை அகற்றுவது குறித்து தமிழ்நாடு காகித நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தி வந்ததாகவும், ரசாயன முறைப்படி இதன் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதோடு அந்நிய மரங்களை அகற்றுவதற்கு 5.36 கோடி ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் ஆணைய மலை, சத்தியமங்கலம், புதுமலை போன்ற பகுதிகளில் அந்நிய மரங்கள் அகற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அப்போது குறுக்கிட்டு பேசிய நீதிபதிகள் அன்னிய மரங்களால் உள்நாட்டு மரங்கள் பலியாவதை ஒப்புக்கொள்ளும் அரசு, அறிக்கை தாக்கல் செய்வதை தவிர வேறு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்ற கேள்வியை எழுப்பினார்.

அந்நிய மரங்கள் அகற்றும் பணியை ஆர்வமுள்ள தனியார் நிறுவனங்கள் ஏன் வழங்ககூடாது என்றும் அரசின் திட்டங்கள் அணைத்தும் காகிதங்களில் இருப்பதை தவிர செயலில் ஏதும் இல்லை என கூறினார். அன்னிய மரங்களால் வனத்துக்கும், வன விலங்குகளுக்கும் அச்சுறுத்தல் உள்ளது, எதிர்காலத்தில் சரணாலயங்கள் அழிந்து விடும் ஆபத்தில் இருப்பதாக நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், அந்நிய மரங்கள் எவ்வளவு அகற்றப்பட்டுள்ளது என்பது குறித்த திட்ட அறிக்கையை 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள் டாஸ்மாக் நிறுவனம் போல் வருமானம் கிடைத்தால் தான் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா என கூறி வழக்கின் விசாரணையை ஜூலை 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *