முதலிரவு ரூமுக்குள் மாப்பிள்ளை செய்த காரியம்: மாமியார் பரபரப்பு புகார்!!!
நாகை மாவட்டம் தொழுதூரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கும் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் சேர்ந்த நளினி என்பவருக்கும் கடந்த 27-ஆம் தேதி தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் 12 பவுன் நகை, கட்டில், மெத்தை, பீரோ என கொடுத்து மணமக்களை வாழ்த்தி தொழுதூரில் உள்ள மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
முதலிரவில் மாப்பிள்ளை ராஜ்குமார் மிருகத்தனமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. மாப்பிள்ளையின் கொடூரமான பாலியல் அத்துமீறலால் புதுமணப்பெண் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதனையடுத்து மணமகன் வீட்டில் இருந்த பெண்ணை மீட்டு அவரை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் மணமகனின் தாய் மாப்பிள்ளை மீது நாகை எஸ்.பி அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் பாலியல் சீண்டலினால் தனது மகளுக்கு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். மகளை பாலியல் சித்திரவதை செய்த மருமகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும், பெண்ணின் தாய் அளித்த புகாரை விசாரித்த நாகை எஸ்.பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.