அங்கன்வாடியில் LKG,UKG வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவு!!

தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரக்கூடிய 2381 அங்கன் வாடிகளில் எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கையை தொடங்க தொடக்கக்கல்வி இயக்குநர் தற்போது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கையை தொடங்க தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து இருந்தனர். தற்போது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இதற்கான நடைமுறைகள் செயல்பட்டு வருவதாகவும், கடந்த ஆண்டில் மட்டும் 5 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

குறிப்பாக 1 முதல் 5 வகுப்பு வரையில் 8.2 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும், ஏற்கனவே 2381 அங்கன் வாடிகளில் தலைமை ஆசிரியர்களால் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் மீண்டும் மாணவர் சேர்க்கை தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே 3-வயது குழந்தைகளை எல்கேஜி வகுப்பிலும், 4-வயது உட்பட்ட குழந்தைகளை யூகேஜி வகுப்புகளில் சேர்த்திட அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. கூடுதலாக வகுப்பறைகள் இருப்பின் அங்கு மாணவர்களை அமர்த்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எந்த பள்ளிகளில் கூடுதல் வகுப்பு கட்டிடங்கள் தேவையோ இதனை அரசுக்கு தெரிவிக்கப்பட்ட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பின்னர் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு கூடுதல் வகுப்பு கட்டடங்கள் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *