சாகர்கவாச் ஒத்திகை: கடல் வழியே ஊடுருவ முயன்ற 4 பேர் கைது!!

தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகளில் சாகர் கவாஜ் ஒத்திகையின் போது 4 தீவிரவாதிகள் கைதுசெய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடல் வழியாக தீவிரவாதிகளை தடுக்கும் வண்ணம் சாகர் கவாச் இரண்டு நாள் ஒத்திகை காலையில் தொடங்கியது. கடலோர காவல் படையினரை தீவிரவாதிகள் போல் வேடமணிந்தும், டம்மி குண்டுகளை கொண்டுவருவதும் அவர்களை சக காவல்படைவீரர்கள் ஒத்திகையின் போது நடைப்பெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு காட்டுப்பள்ளி கடற்கரை கிராமங்களை ஒட்டியுள்ள கிராமங்களில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது காட்டுப்பகுதியில் உள்ள எல்.எம்.டி கப்பல் கட்டும் தளத்தில் ஊடுருவ முயன்ற 4 பேரை கடலோர பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் தீவிரவாதிகள் போல் வந்த 4 பேரும் கடலோர குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்திய கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு குழுமம், தொழில் பாதுகாப்பு படை ஒன்றிய மானிய உளவுப்பிரிவு போலீசார் இணைந்து சாகர் கவாச் ஒத்திகையில் பங்கேற்றுள்ளனர்.

மேலும் கல்பாக்கம், வேதாரண்யம், கன்னியாகுமரி ஆகிய இடங்களிலும் சாகர் கவாச் ஒத்திகை நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *