வாங்கினது ஒரு லட்சம் வட்டியோ 6 லட்சம்; 6 பேரை தட்டித்தூக்கிய போலீஸ்!

ஒரு லட்ச ரூபாய் கடனுக்கு 6 லட்சம் ரூபாய் வரை வட்டி வசூலித்த 6 பேர் மீது கந்து வட்டி தடைச் சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த அனிதா என்ற பெண்மணியிடம் ஒரு லட்சம் ரூபாய் வட்டிக்கு கொடுத்து விட்டு அதன்பின்பு மாத வட்டி தின வட்டி என கூறி ரூ 6 லட்சம் வரை பெற்றுக்கொண்டு அசல் தொகை வரவில்லை அனிதாவை மிரட்டியதால் அவர் தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் புதுக்கோட்டை சின்னப்பா நகரைச் சேர்ந்த இந்திரா அவரது மகள் பூப்பாண்டி,மகன் மணிகண்டன் மற்றும் அசோக் நகரைச் சேர்ந்த ராதா காமராஜ புரத்தை சேர்ந்த ஹரி அவரது மனைவி சித்ரா உள்ளிட்ட 6 பேர் மீது புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார் கந்து வட்டி தடைச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இதில் முதல் குற்றவாளியான இந்திரா கடந்த 20ஆம் தேதி மற்றொரு வழக்கில் கந்து வட்டி தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *