இனி இவங்களுக்கு டபுள்… அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு அசத்தல் அறிவிப்பு!

சாதாரண பயண கட்டண பேருந்துகளில் பணிபுரியும்
பணியாளர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்க அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த, நான்காவது கட்ட
பேச்சுவார்த்தை மே 12ம் தேதி அன்று போக்குவரத்துத்துறை
அமைச்சர் சிவசங்கர் அவர்கள் தலைமையில்,
போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலர் டாக்டர் கே.கோபால்,
அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின்
பிரதிநிதிகள் பங்கேற்று, மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்யும்
பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பேட்டாவை நிர்ணயம்
செய்திட வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

“மாநகர் போக்குவரத்துக் கழகம்(சென்னை)லிட்., சென்னை உள்ளிட்ட
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சாதாரண பயண கட்டண
பேருந்துகளில் மகளிர் இலவச பேருந்து பயணம் செய்ய அனுமதித்ததை
தொடர்ந்து ஓட்டுநர், நடத்துநர்கள் பெற்று வந்த வசூல்படி(Collection
Batta) குறைவினை ஈடுகட்டும் வகையில் அதனை உயர்த்தி
முறைப்படுத்தி வழங்கும் வகையில் சாதாரண கட்டண பேருந்துகளின்
ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும்
வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும்” என
போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *