வாரத்தின் முதல் நாளில் உயர்ந்த தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக தமிழகத்தில் கச்சா எண்ணெய் விலையில் தொடர்ந்து தங்கம் விலையும் உயர தொடங்கியது. இதனால் நகை வாங்கும் இல்லத்தரசிகள் மிகவும் கவலை அடைந்தனர். இந்த சூழலில் தற்போது தங்கம் விலையானது இன்றைய தினத்தில் குறைந்துள்ளது.

இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4, 770 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4,760 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 10 அதிகரித்து சவரனுக்கு ரூ.38, 160-க்கு ஆக விற்பனையாகிறது.

அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. நேற்று மாலை இதன் விலை ரூ. 5, 192- ஆக இருந்தது. தற்போது கிராமுக்கு 11 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 5,203-ஆகவும் பவுனுக்கு ரூ. 41,624 ஆக விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் மாற்றமின்றி காணப்படுகிறது. அந்த வகையில் இன்று ஒரு கிராம் 66 காசுகளாகவும் ஒரு கிலோ 66 ஆயிரமாக விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *