துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்: இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வலசை கிராமத்தைச் சேர்ந்த மணி இவரது மகன் காசிப்பிள்ளை (வயது 32) இவருக்கும் தொட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நிலவழகன் மகள் சாந்தகுமாரிக்கும் கடந்த ஆறு வருடம் முன்பு திருமணம் நடைபெற்றது இதில் 2 மகன் ஒரு மகள் உள்ளனர். சாந்தகுமாரிக்கு கடந்த மூன்று மாதம் முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில் காசிப்பிள்ளை அவரது மனைவி குழந்தை மற்றும் தாயுடன் அருகில் உள்ள அவர்களுடைய வயலில் கடந்த 40 வருடங்களாக வீடு கட்டி தனியாக வசித்து வருகின்றனர் இந்த நிலையில் நேற்று இரவு காசிப்பிள்ளை தனது மனைவியுடன் வீட்டின் வெளியே அமர்ந்து உணவு அருந்தும் பொழுது அப்போது மோட்டார் சைக்கிளில் அவர்களை வீட்டை சுற்றி வந்த மர்ம நபர்கள் திடீரென நாட்டுத் துப்பாக்கியால் சுட்டனர்.

அப்போது வெளியில் இருந்த சாந்தகுமாரி மீது இடுப்பில் குண்டு பாய்ந்தது அப்போது வீட்டில் இருந்த அவரது தாய் கருப்பாயி மற்றும் அக்கா சுமதி அனைவரும் வெளியே வந்து பார்க்கும்போது ரத்தவெள்ளத்தில் சாந்தகுமாரி கீழே மயங்கி விழுந்தார். பின்னர் வெளியில் வந்து கருப்பாயி பார்க்கும் போது ஒரு நபர் நெற்றியில் லைட்ட் கட்டிக் கொண்டு அவர்கள் வீட்டை நோக்கி அடித்துக்கொண்டிருந்தது தெரியவந்தது.

அவர்களை காசிப்பிள்ளை துரத்தி பிடிக்க ஓடும் பொழுது அவர்கள் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினர். பின்னர் ரத்த வெள்ளத்தில் இருந்த சாந்தகுமாரியை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு போதிய சிகிச்சை அளிக்காதனால் அவரை மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் பலத்த காயம் ஏற்பட்டு சாந்தகுமாரி தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே இடுப்பில் இருக்கும் குண்டுகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற உள்ளனர். வலசை கிராமம் அருகே இரஞ்சி காப்புக்காடு உள்ளது. அங்கு இருந்து மான், மயில், முயல், காட்டுப்பன்றிகள் வலசை கிராமத்தில் இருக்கும் விவசாய நிலத்தில் பயிர்களை சேதப்படுத்திவிடும் இதனை அறிந்த மர்மநபர்கள் வெளியிலிருந்து வந்து வேட்டையாடி மான் முயல் காட்டுப்பன்றி என எடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *