சென்னை ஐஐடி நிர்வாகம் மீது தலித் அமைப்பு பரபரப்பு குற்றச்சாட்டு!!

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கு சென்னை ஐஐடியில் வழங்கப்பட வேண்டிய 22% வேலைவாய்ப்பை வழங்காமல் பிற வகுப்பினருக்கு வழங்கியது தொடர்பான விவரங்களை மத்திய தகவல் ஆணையம் வழங்க உறுதியளித்துள்ளது.

சென்னை ஐஐடியில் வெறும் 2% மட்டுமே தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களின் பணி இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது. மீதி பணியிடங்களை உயர் வகுப்பினருக்கு வழங்கியதாக தலித் ஆக்சன் கமிட்டி எனப்படும் தன்னார்வு அமைப்பு குற்றம் சாட்டி வருகிறது.

பணி நியமனம் தொடர்பாக ஐஐடி நிர்வாகத்தினரிடம் முறையிட்டும் உரிய பதில் அளிக்காததால் தலித் ஆக்சன் கமிட்டி தகவல் உரிமை சட்டம் மூலமாக மத்திய தகவல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.

இது தொடர்பாக தஞ்சையில் காணொலிக் காட்சி மூலமாக நடந்த விசாரணையில் சென்னை ஐஐடியில் இட ஒதுக்கீடு தகவல் தொடர்பாக விரைவில் வழங்குவதாக ஆணையத்தின் தலைவர் அமிதா பாண்டே உறுதியளித்துள்ளார்.

நேற்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற காணொலிக்காட்சி விசாரணையில் சென்னை ஐஐடி பதிவாளர் ஜானே பிரசாந்த் பதிங்கேற்றார். இதனிடையே சென்னை ஐஐடியில் பணிநியமன முறைகேடுகளின் விசாரணையை நடத்த கோரி தமிழ்நாடு சட்ட ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு விடம் புகார் அளிக்க இருப்பதாக தலித் ஆக்சன் அமைப்பு கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *